ஜூனியர் என்டிஆர் படத்தை இயக்கும் கேஜிஎப் இயக்குனர்

i3 14
i3 14

தெலுங்கு இளம் முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது ராஜமவுலியின் இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். நேற்று ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் ஒரு பர்ஸ்ட்லுக் போஸ்டரையோ அல்லது டீஸரையோ அவருக்கு பரிசாக தர முடியாமல் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கேஜிஎப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல், ஜூனியர் என்டி.ஆருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளதுடன், ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்களுக்கு எதிர்பாராத பிறந்தநாள் பரிசாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஆம்.. ஜூனியர் என்டி.ஆருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர், “அடுத்த முறை உங்களைச் சுற்றியே எனது பயணப்பாதை அமையும்” என்று சூசகமாக அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஜூனியர் என்டிஆர் படத்தை கேஜிஎப் இயக்குனர் இயக்குகிறார் என்பது அரசல் புரசலாக சொல்லப்பட்டு வந்த நிலையில், இயக்குனர் பிரசாந்த் நீல் வெளியிட்ட பிறந்தநாள் டுவீட் கிட்டத்தட்ட அதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றே சொல்கின்றனர்.. இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருக்கிறார்களாம்.