சற்று முன்
Home / இலக்கியக்குரல் / நீதியின் அரசே, நின் வெற்றியில் நிமிர்வோம்!
VIGNESWARAN
VIGNESWARAN

நீதியின் அரசே, நின் வெற்றியில் நிமிர்வோம்!

நீதியின் அரசே!
காலம் எமக்களித்த பெருவரமே
அறிவுத் துணிவான
நின் ஆற்றலில் தலை நிமிர்ந்தோம்!

சொல்லும் செயலும் வேறான
சின்ன மனிதர் சுயநலத்தால்
எல்லாம் தொலைத்தோம்
விலை போகும் மனிதரை
நம்பி நம்பி ஏமாந்தோம்….
தளர்ந்து இளைத்த தருணத்தில்
கடவுளாய் வந்த நின்றன்
தலைமையில் ஒன்று சேர்ந்தோம்!

எங்களை பீடித்த
விக்கினங்கள் போயகல
ஈஸ்வரனே என்றென்றும் உடனிருப்போம்!

யார்க்கும் அடிமையில்லாத
நாளையை கட்டமைப்போம்
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி
மக்கள் பேரியக்கமாய் எழுக!

நின்
நிமிந்த நடையும்
நேர் கொண்ட பார்வையும்
நீதியை வெல்ல வைக்கும்!
அஞ்சாது முன் செல்வோம்!!

நகுலா

x

Check Also

111880616 gettyimages 1210615851

சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

சர்வதேச ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 555 பேருக்கு கொவிட்-19 ...