கால அவகாசம் கோரியது மக்களின் நன்மைக்காகவே – லக்ஷ்மன் யாப்பா

1 ju
1 ju

நாட்டின் கடன் தவணையை செலுத்துவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிடம் கால அவகாசம் கோரியது மக்களின் நன்மைக்காகும் என தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் விமர்சனம் சிறுபிள்ளைத்தனமானதாகும் எனவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அவிருத்தி நடவடிக்கைகளுக்காக அனைத்து அரசாங்கங்களும் வெளிநாடுகளில் இருந்து கடனைப் பெற்றுக்கொள்கின்றன.

நாட்டின் மொத்த கடன் தொகை கடந்த 2005ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 200 பில்லியனாக இருந்தது. அது கடந்த 2014ஆம் ஆண்டில் 7 ஆயிரத்து 400 மில்லியனாக அதிகரித்திருந்தது. மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கடந்த 9 வருட காலத்தில் 5 ஆயிரத்து 200 பில்லியன் ரூபாவை  கடனாக   பெற்றிருந்தது.

ஆனால் 2014 இல் இருந்து 2019ஆம் ஆண்டாகும்போது மொத்த கடன்தொகை 14 ஆயிரம் பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த அரசாங்கம் 5 வருடத்தில் 6 ஆயிரத்து 600 பில்லியன் ரூபாய் வெளிநாடுகளில் இருந்து கடன்பெற்றுள்ளது.

அதன் பிரகாரம் இந்த வருடம் 480 பில்லியன் ரூபா  வெளிநாட்டு கடன் தவணைகள் செலுத்தவேண்டி இருக்கின்றது. நாட்டின் தற்போதைய நிலைமையில் கடன் தவணையை செலுத்த நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதன் பாதிப்பு நாட்டு மக்களுக்கே ஏற்படுகின்றது.

அதனால் பொறுப்புவாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் மக்களின் நன்மை கருதி, இந்தியாவுக்கு செலுத்தவேண்டிய கடன் தவணையை மேலும் 3 வருடங்கள் காலம் தருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய விஜயத்தின்போது, இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்” என அவர் மேலும் தெரிவித்தார்.