சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்!

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்!

இந்தியாவிலிருந்து சமீபத்தில் நாடு திரும்பியவர்களுக்கு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனால் அவசர அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

“இலங்கையில் நேற்று புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றுள்ளவர்களுள் நான்கு பேர் இந்தியாவிலிருந்து அண்மைக் காலத்தில் நாட்டுக்குள் வந்தவர்களாவர்.

இதனால் இக்காலப் பகுதியில் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய அனைவரையும் உடனடியாக அடையாளம் காணுமாறு இலங்கையின் மத்திய சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

எனவே கடந்த மார்ச் 14 ஆம் திகதி அல்லது அதன்பின்னர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் அனைவரும் உடனடியாக 021 221 7278 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

மேலும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளவர்கள் அனைவரும் உடனடியாக தம்மைத் தத்தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதுடன் காய்ச்சல், தொண்டை நோ மற்றும் வரட்டு இருமல் போன்ற நோய் அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரச வைத்தியசாலையை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்” எனக் குறித்த அறிவித்தலில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

மட்டக்களப்பில் ஆலயங்கள், தேவாலயங்களுக்கு தொற்று நீக்கி வீசும் நடவடிக்கை!

கொரோனா நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தேவலாயங்கள் மற்றும் ...