சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / 15 பேருக்கு பரிசோதனை: தொற்று இல்லையென அறிவிப்பு

15 பேருக்கு பரிசோதனை: தொற்று இல்லையென அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் மேலும் 15 பேரின் மாதிரிகள் ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் எவருக்கும் கோரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்ட மூவரின் மாதிரிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பரிசோதைக்கு உட்படுத்தப்பட்டன.

அவர்கள் மூவருக்கும் கோரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரியாலை தேவாலயத்தில் சுவிஸ் போதகர் நடத்திய ஆராதனையில் பங்கேற்றவர்கள் என அரியாலை, குருநகர் மற்றும் கொழும்புத் துறை பகுதிகளில் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள 12 பேரின் மாதிரிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அவர்கள் 12 பேருக்கும் கோரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று 18 பேருக்கு கொரோனா தொற்று குறித்த பரிசோதனையில் அவர்களுக்கும் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

மட்டக்களப்பில் ஆலயங்கள், தேவாலயங்களுக்கு தொற்று நீக்கி வீசும் நடவடிக்கை!

கொரோனா நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தேவலாயங்கள் மற்றும் ...