அடுத்த வாரம் முதல் தனியார் துறைகழும் ஆரம்பம்

8 ohh
8 ohh

நாட்டில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும்அடுத்த வாரம் முதல் திறப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

சுகாதார வழிமுறைகளை பின்பன்றி தனியார் நிறுவனங்களை திறப்பதற்கு அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் நியமிக்கப்பட்ட சிறப்பு முத்தரப்பு பணிக்குழு இணக்கம் வெளியிட்டுள்ளது.

பணிக்குழுவின் பிரதிநிதிகள், இலங்கை முதலாளிகள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சில் சந்தித்து இந்த இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு குழு கூட்டத்தில் தனியார் துறையையும் அதன் ஊழியர்களையும் பாதிக்கும் பல விடயங்கள் தொடர்பில் சிறப்பு முடிவுகளை எட்ட முடிந்துள்ளது.

அனைத்து ஊழியர்களுக்கும் வேலை பாதுகாப்பை உறுதி செய்வதே அரசாங்கத்தின் கொள்கை என அமைச்சர் இதன் போது வலியுறுத்தினார்.

அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக எந்த ஊழியரையும் நீக்க கூடாதென என முடிவு செய்யப்பட்டது. சமூக தூரத்தை பாதுகாக்கும் அதே நேரத்தில் நிறுவனத்தின் கடமைகளைச் செய்யவும், சேவை மாற்றத்தை தேவைக்கேற்ப பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

சேவை காலத்திற்கு சேவை ஒப்பந்தங்களின்படி செலுத்த வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட கொடுப்பனவுகளுடன் சம்பளத்தை செலுத்துதல், (வீட்டில் இருந்த காலப்பகுதியில்) அடிப்படை சம்பளத்தில் 50% அல்லது 14500 ரூபாய் செலுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் EPF மற்றும் ETF பணத்தை உரிய முறையில் வைப்பிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.