சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / ரத்னஜீவன் ஹூல் மீதான குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணைக்குழு விரைவில் அறிக்கை!

ரத்னஜீவன் ஹூல் மீதான குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணைக்குழு விரைவில் அறிக்கை!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை ஒன்றை விரைவில் வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தல்கள் திணைக்களத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கிடையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் அரசியல் பிரமுகர்களின் கருத்துக்களுக்கு இணங்கச் செயற்படுகின்றார் எனவும், அவரது புதல்வி வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள போதிலும் எந்தவித தனிமைப்படுத்தல் செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை எனவும், மேலும் சில காரணங்களை முன்வைத்தும் வெளியிலிருந்து அவர் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், அவற்றுக்குப் பதில் வழங்கும் விதத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவே விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

x

Check Also

ஆறுமுகன் தொண்டமானுக்கு அம்பாறையில் அஞ்சலி

கல்முனை பாண்டிருப்பு எல்லைப்பகுதியில் உள்ள ஸ்ரீ அரசடி அம்மன் ஆலயத்தின் முன்பாக இடம்பெற்றது அருகில் உள்ள ...