சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / கொட்டகெத்தன பிரதேசத்தில் மீண்டுமொரு படுகொலை

கொட்டகெத்தன பிரதேசத்தில் மீண்டுமொரு படுகொலை

கடந்த காலங்களில் படுகொலைகள் அரங்கேறிய இரத்தினபுரி – கொட்டகெத்தன பிரதேசத்தில் மீண்டுமொரு படுகொலை இன்று நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கஹவத்த – கொட்டகெத்தன ஓபாத்த வீதியில் உள்ள வீடொன்றின் மலசல கூடத்திலிருந்து 42 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தந்தை படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.

குறித்த வீட்டில் வைத்தே இந்தப் படுகொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கஹவத்த பொலிஸார் நடத்திவருகின்றனர்.

x

Check Also

குருநாகலில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் ஏனைய பகுதிகளிற்கும் பரவுகிறது!

குருநாகல் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள், அங்கிருந்த பிறஇடங்களிற்கும் வேகமாக பரவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ...