தேர்தல் மனுக்கள் மீதான விசாரணை 8ஆவது நாளாக மீண்டும் ஒத்திவைப்பு

5 yy 1
5 yy 1

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் வர்த்தமானி அறிவிப்பு ஆகியவற்றுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நாளை காலை 10 மணி வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 18ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த மனுக்கள், 8ஆவது நாளாக இன்று காலை 10 மணியளவில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிகாரே, சிசிர டி  அப்ரூ, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.

எனினும், குறித்த மனுக்கள் மீதான விசாரணை 8ஆவது தடவையாக நாளை வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது