சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / குணமடைந்த கடற்படையினர் எண்ணிக்கை 357 ஆக உயர்வு!
0es
0es

குணமடைந்த கடற்படையினர் எண்ணிக்கை 357 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்றால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 13 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி கொரோனாத் தொற்றால் பீடிக்கப்பட்டு குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 357ஆக உயர்வடைந்துள்ளது எனக் கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

குணமடைந்த 13 பேரில் 08 பேர் கடற்படை பொது வைத்தியசாலையிலும், 04 பேர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலும், மற்றுமொருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, இவர்களை மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது கொரோனா தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் கடற்படை மற்றும் அவர்களுடன் நெருக்கமான 748 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 712 கடற்படையினர் உள்ளடங்குகின்றனர்.

x

Check Also

186b9b18 c8464994 mask 850x460 acf cropped

வேட்புமனு இலக்கங்கள் அச்சிடப்பட்ட முகக்கவசங்கள்!

நாட்டின் அரசியல்வாதிகளின் பெயர்கள் மற்றும் வேட்புமனு இலக்கங்கள் என்பன அச்சிடப்பட்ட முகக்கவசங்கள் வெளியாகியிருப்பது தொடர்பில் ஆராய்ந்து ...