பேக்கரி உணவுகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு

6 yyyt
6 yyyt

எதிர்வரும் நாட்களில் பேக்கரி உணவு உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க நேரிடும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் நிலைமையுடன் தமது தொழிற்துறை முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் விலை அதிகரிக்கப்பட வேண்டிய பேக்கரி உணவு தொடர்பாக இதுவரை தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பேக்கரி உற்பத்தி உணவான பாண் இலங்கை மக்களின் பிரதான உணவுகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் மக்களின் அத்தியவசியமான உணவு பொருட்களில் ஒன்றாக இருக்கும் பாண் போன்ற பேக்கரி உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்தால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.