சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / கருணாவுக்கு அரச பொது மன்னிப்பு – மஹிந்த
blog pic1

கருணாவுக்கு அரச பொது மன்னிப்பு – மஹிந்த

கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு பிரத்தியேகமாக பொதுமன்னிப்பு வழங்கப்படாதபோதும் பொதுவாக முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் அவரும் உள்ளடங்குவார் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று (புதன்கிழமை) தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, கருணா அம்மானுக்கு அரச பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதா என, அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட பிரதமர், “கருணா அம்மான் வெளியிட்ட கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் தவறு உள்ளது. அது தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

அவருக்கு பிரத்தியேகமாக பொதுமன்னிப்பு வழங்கப்படாதபோதும் பொதுவாக முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பில் அவரும் உள்ளடங்குவார்” என தெரிவித்துள்ளார்.

இதேநேரம், முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் கீழ் ஏன் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது என இதன்போது கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்க பதிலளித்த பிரதமர், விடுவிக்க முடியாத குற்றவியல் தொடர்புடைய பலர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுள் உள்ளடங்குவதால் அவர்களை உடனடியாக பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

x

Check Also

202003110023479465 Attack on SDPI administrator Police escort for mob SECVPF

அடையாளம் தெரியாத (04) நபர்களினால் தாக்குதல்!

நாட்டின் காலி – மிட்டியாகொட – களுபே பிரதேசத்தில் இன்று (06) மதியம் வீதியில் இருந்து ...