சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / முகக்கவசத்தின் ஊடாக வைரஸிலிருந்து பாதுகாப்பு
mask 50 1

முகக்கவசத்தின் ஊடாக வைரஸிலிருந்து பாதுகாப்பு

முகக்கவசத்தின் ஊடாக வைரஸிலிருந்து பாதுகாப்பு

முகக்கவசங்களை அணிவதனூடாக கொரோனா நோயாளர்களிடமிருந்து வைரஸ் சூழலில் பரவுவதை குறைத்துக்கொள்ள முடியும் என இலங்கை சுவாச நோய் தொடர்பான வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறைவான அறிகுறிகள் அல்லது அறிகுறிகள் அற்ற நிலையிலும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என சங்கத்தின் ஆய்வுப் பணிப்பாளர் துஷ்யந்தர மெதகெதர தெரிவித்துள்ளார்.

இதனால் முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவௌியை பேணுவதுடன் பொதுமக்கள் அதிகம் சஞ்சரிக்கும் இடங்களில் சளியை வௌியேற்றுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெவ்வேறு நோய் நிலைமைகளினால் அவதியுறும் நோயாளர்களும் இந்த அறிவுறுத்தலை பின்பற்றுவது உயிர் ஆபத்துகளை தவிர்த்துக்கொள்ள உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

x

Check Also

IMG 1126

வயல் காணிகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை:திலீபன்!

வவுனியாவில் வனவளத்திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு எல்லையிடப்பட்ட வயல் காணிகளை உடனடியாக விடுவித்து அடுத்த காலபோக செய்கையை மேற்கொள்ள ...