சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / பொதுஜன பெரமுனவை தோல்வியடைய செய்யும் பலம் வேறு கட்சிகளுக்கு இல்லை:பசில் ராஜபக்க்ஷ!
basil 720x480 1
basil 720x480 1

பொதுஜன பெரமுனவை தோல்வியடைய செய்யும் பலம் வேறு கட்சிகளுக்கு இல்லை:பசில் ராஜபக்க்ஷ!

நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவை தோல்வியடைய செய்யும் பலம் வேறு கட்சிகளுக்கு இல்லை என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் பொதுத் தேர்தல் வெற்றியினை தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் கீழ் புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

நாங்கள் தேர்தலில் பெறும் வாக்குகளின் பெரும் எண்ணிக்கையை வேறு எந்த கட்சியும் நெருங்க கூட மாட்டார்கள்.

அதாவது, ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது வேறு எந்ததொரு கட்சியோ ஒரு மாவட்டத்தைக்கூட வெற்றிக்கொள்ளும் என்று கூறமுடியாது.

அதாவது யானைக்கோ தொலைபேசிக்கோ ஒருபோதும் வெற்றி கிடைக்காது. 135 ஆசனங்களை கைப்பற்றுவோம் என எதிர்பார்க்கின்றோம்.

எனினும் மக்கள், 150 ஆசனங்களையும் பொதுஜன பெரமுனவுக்கு பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.

x

Check Also

unnamed 19

ஐ.தே.கவின் தலைவராக கரு இணக்கம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்பதற்குத் தான் தயார் என்று முன்னாள் சபாநாயகர் கரு ...