சற்று முன்
Home / செய்திக்குரல் / இலங்கை / மீட்கப்பட்ட 04 கைத்துப்பாக்கிகள்!
347393 550x300 crop 1
347393 550x300 crop 1

மீட்கப்பட்ட 04 கைத்துப்பாக்கிகள்!

புதரொன்றில் வீசப்பட்ட நிலையில் 4 கைத்துப்பாக்கிகள் மற்றும் 8 மகசின்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கொழும்பு குற்றப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய, இன்று முற்பகல் 10.30 மணியளவில், கல்கிஸை, இதிகஹதெனிய பிரதேசத்தில் வைத்து குறித்த ஆயுதங்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள கால்வாயுடன் இணைந்த வகையில் காணப்பட்ட காட்டுப் பகுதியில் வீசப்பட்ட நிலையில் 4 கைத்துப்பாக்கிகள் மற்றும் அதற்கான 8 மகசின்களை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையின் சிறைக் காப்பாளர் ஒருவரின் வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட ரி – 56 துப்பாக்கிகளுக்கான 13 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

x

Check Also

b191

குருணாகலை நீதவான் நீதிமன்றம் குருணாகலை நகர மேயர் உட்பட ஐந்து பேருக்கு பிடியாணை!

குருணாகலை புவனேகபாகு அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குருணாகலை நகர மேயர் உட்பட ...