10 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட 3 பேர் கைது!

WhatsApp Image 2020 08 14 at 02.56.19 2
WhatsApp Image 2020 08 14 at 02.56.19 2

மட்டக்களப்பு நகரில் பிரபல தங்க நகை கடை உடைத்து 10 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் 4 இலச்சத்து 75 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நகைக்கடை உரிமையாளர் கணவன் மனைவி உட்பட 3 பேரை கைது செய்துள்ளதுடன் 8 கிலோ தங்க ஆபரணங்கள் 2 அரை இலச்சம் ரூபா பணத்தை மீட்கப்பட்ட சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த தங்க நகைக் கடை கடந்த முதலாம் திகதி சனிக்கிழமை வழமைபோல கடையை பூட்டிவிட்டு வீடு சென்று திங்கட்கிழமை 3 ஆம் திகதி கடையை திறப்பதற்கு வந்தபோது கடையின் பின்கதவு உடைக்கப்பட்டு கடையினுள் இருந்த தந்க ஆபரணங்கள் வைக்கப்பட்ட பாதுகாப்பு பெட்டகத்தை திறந்து அதில் இருந்த 10 கோடி ரூபா பெறுமதியான சுமார் 7 அரை கிலோ தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது

இதனையடுத்து சிரேஷட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறியின் வழிகாட்டலில் மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே.ஹட்டியாராச்சி தலைமையில் மாவட்ட புலனாய்வு பிரிவு , பொலிஸ் களணி தொழில் நுட்ப பிரிவு, தடவியல் பிரிவு, பெரும் குற்றத்தடுப்பு பிரிவு ஆகிய நான்கு பிரிவுகளையும் சேர்ந்த சுமார் 20 மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் களத்தில் இறக்கிவிடப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ளன.

இந்த நிலையில் முதற்கட்டமாக குறித்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி. கமராவினை ஆராய்ந்தபோது சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை (2) அதிகாலை ஒரு மணி 09 நிமிடமளவில் கறுப்பு நிற ரெயின் கோட் உடையணிந்து முகத்தில் முகக்கவசம் அணிந்து கடையின் பின்பகுதியில் உள்ள கடை ஒன்றின் கூரைப் பகுதியால் குறித்த கடைக்குள் இறங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடையின் பின்பகுதியில் பூட்டியிருந்த கதவை உடைத்து கடையின் தங்க ஆபரணங்கள் வைக்கும் பாரிய பாதுகாப்பு பெட்டகத்தின் திறப்பின் மூலம் பெட்டகத்தை திறந்து அங்கிருந்த சுமார் 7 அரை கிலோ கொண்ட 10 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபகரணங்கள் 4 அரை இலச்ச ரூபா பணம் கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது சி.சி.ரி கமராவில் பதிவாகியிருந்தது.

குறித்த கொள்ளையர்கள் அணிந்திருந் முகக்கவசம் மற்றும் ரெயின்கோட் யெக்கட் அணிந்ததினால் அவர்களை அடையாளம் காணமுடியாது நிலை ஏற்பட்டது. இருந்தபோதும் கடை பகுதியில் அமைந்திருந்த வீதிகளில் உள்ள ஏனைய கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி கமராக்கள் சோதனை மற்றும் புலனாய்வு பிரிவினர்கள்.பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த 15 நாட்கள் இரவு பகலாக தொடர்ந்து விசாரணைகளில் ஈடுபட்டு வந்தனர்.

இந் விசாரணையின் அடிப்படையில் கொள்ளையர்கள் கொண்டு சென்ற துணி பைய் மற்றும் மோட்டார் சைக்ககிள் தலைக் கவசம் சி.சி.ரி கமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணையில் அந்த பகுதியில் தங்க நகைக்கடை உரிமையாளரை கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்ட நிலையில் குறித்த நபர் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக கொள்ளையிடப்பட்ட தந்த நகை கடையில் பணிபுரிந்து வந்துள்ளதாகவும் அங்கு சிறு சிறு களவுகள் காரணமாக அவரை கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் பணியில் இருந்து நீக்கியுள்ளதாக தெரியவந்தது.

இதனையடுத்து மட்டு தலைமையக பொலிஸ்நிலை நிர்வாக மற்றும் உதவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்..எஸ். சமந்த தலைமையிலான பொலிசார் களுதாவளையைச் சேர்ந்த தங்க நகைக்கடை உரிமையாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் கொள்ளையிட்ட தங்க நகை கடையில் பணிபுரியும் போது அங்கு முகாமையாளராக பணிபுரிந்துவருடன் இனைந்து அவரின் உதவியுடன் பாதுகாப்பு பெட்டகத்தின் திறப்பை பெற்று அதேமாதிரி ஒரு திறப்பை அரசடியிலுள்ள திறப்பு வெட்டும் கடையில் திறப்பை ஒன்றை வெட்டியுள்ளனர். எனவும் அதன் பின்னர் அவரது கம்பளை கலஹா சேர்ந்த நண்பனும் நகை கடை உரிமையாளரர்டன் சேர்ந்து 2 பேரும் கொள்ளையிட பல நாட்கள் திட்டங்கள் தீட்டியுள்ளனர்.

இக் கொள்ளை திட்டத்தை நிறைவேற்ற கடந்த 1 ம் திகதி முடிவு செய்து அந்த கால பகுதியில் தேர்தல் பிரச்சார இறுதி கால நேரம் என்பதால் யாரும் சந்தேகப்பட வாய்ப்பு இல்லை என்பதற்காக அந்த திகதியை தெரிவு செய்தனர் எனவும் அன்றை தினம் மாலை 7.30 மணிக்கு மோட்டர் சைக்கிளில் கம்பளையைச் சேர்ந்த நண்பர் அன்றைய தினம் அவர் அங்கிருந்தது பஸ்வண்டியில் தம்புள்ளை வரை வந்து இறங்கி அங்கு ரெயயின் கோட் இரண்டை வாங்கி கொண்டு மட்டக்கப்பு கல்லடியில் வந்து இறங்கிய நிலையில் அவரை மோட்டார் சைக்கிளில் சென்று அவரை ஏற்றிக்கொண்டு களளுதாவளைக்கு சென்று அங்கிருந்து மீண்டும் மட்டக்கப்பு வந்து இறங்கி தமது கடையின்; காத்திருந்தனர்; எனவும்.

பின்னர் நள்ளிரவு தமது கடையின் கூரையின் மேல் ஏறி ரெயின் கோட் அணிந்து கொள்ளையடிக்கும் கடையின் பின்பகுதி மாடிக்கு சென்று அங்கிருந்து கடையின் கட்டிட பகுதிக்குள் உள் நுழைந்து கடையின் பின்பகுதியில் இருந்த கதவினை உடைத்து கடைக்குள் சென்று பாதுகாப்பு பெட்டகத்தை கொண்டு சென்ற திறப்பால் திறந்து அங்கிருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் 4 இலச்சத்து 75 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர்.

இதில் கொள்ளையடிக்கப்பட் தங்க ஆபரணங்களில் 4 அரை கிலோ தங்கத்தை அவரும் அவரது கம்பளையைச் சேர்ந்த நண்பருக்கு 3 அரை கிலோ தங்க ஆபரணங்கள் என பிரித்தோம் எனவும் அதன் பின்னர் நண்பர் தனது ஊருக்கு சென்றுவிட்டார்.

நான் எனக்கும் கொள்ளைக்கும் எதுவிதமான சம்மந்தமும் இல்லாதவர்கள் போல் வழமைபோல தனது தங்க நகை கடைக்கு வந்து கடையை திறந்து அங்கு என்ன நடக்கின்றது என வேவுபார்த்து வந்துள்ளதாக கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதில் முதலில் கைது செய்யப்பட்ட கொள்ளையரின் வீட்டில் நகை புதைக்கப்பட்டிருந்த நிலையில் 2 பேரை கைது செய்தனர்.

இதனையடுத்து கம்பளை கலஹாவிற்கு விரைந்த பொலிசார் அங்கு வைத்து இக் கொள்ளையுடன் தொடர்புடைய நகை கடை உரிமையாளரை கைது செய்ததுடன் அங்கிருந்து 3 அரை கிலோ தங்க ஆபரணங்களை மீட்டு அவரை மட்டக்களப்பிற்கு அழைத்துவந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனார்.

இதில் 10 கோடி ரூபா பெறுமதியா 8 கிலோ தங்க ஆபரணங்கள் 2 அரை இலச்சம் ரூபா பணத்தை மீட்டுள்ளதுடன் இதில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.