சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / பெரியநீலாவணை பிரதேச மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது

பெரியநீலாவணை பிரதேச மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு இரண்டாம் கட்டமாக 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் தற்போது அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களிலும் இடம்பெற்று வருகின்றன.

இந்த திட்டத்துக்கு அமைய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பெரியநீலாவணை பிரதேச சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.

பிரதேச செயலாளர் A.J.அதிசயராஜ் தலைமையில்
ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
V.விமலராஜ், கிராம சேவை உத்தியோகத்தர் T.திலீபன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்
V.ஜீவராணி ஆகியோர் கலந்துகொண்டு 350 குடும்பங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்கி வைத்தனர்.

x

Check Also

கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 1,643 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய 10 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றிரவு 10.30 மணியளவில் ...