சற்று முன்
Home / செய்திக்குரல் / வடகிழக்கு / ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டு – உரும்பிராயைச் சேர்ந்த இளைஞர் கைது
unnamed 1 1
unnamed 1 1

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டு – உரும்பிராயைச் சேர்ந்த இளைஞர் கைது

கெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உரும்பிராயைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் கெரோஜின் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக இரகசியத் தகவல் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் உரும்பிராய் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞனைக் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து 60 மில்லிக்கிராம் கெரோஜின் போதைப்பொருளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கெரோஜின் போதைப்பொருட்களுடன் இளைஞர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

x

Check Also

vimales sumanthiran

சுமந்திரன், சிறீதரன்மீது நடவடிக்கை எடுங்கள்! பதவி விலகும் தமிழரசின் மகளிர் அணி செயலாளர்

சுமந்திரனால் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட நேர்காணலில் வேதனையடைந்த தமிழ் மக்கள் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களில் ...