டெங்கு நோயால் 92 பேர் உயிரிழப்பு!

ew
ew

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனால் நவம்பர் 27 முதல் டிசம்பர் 2 ஆம் திகதி வரை ஆறு மாவட்டங்களில் சிறப்பு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று அந்த பிரிவின் இயக்குநர் டாக்டர் அருணா ஜெயசேகர தெரிவித்தார்.

இந்த திட்டம் கொழும்பு, கம்பாஹா, மாத்தளை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தொடங்கப்படும்.

அத்துடன் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருப்பதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெறுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆண்டு இதுவரை 73,601 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன் 92 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.