மாணவனால் தயாரிக்கப்பட்ட ஹெலிகொப்டர்!!

1 Airoplane
1 Airoplane

இரத்தினபுரி குருவிற்ற மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த தருசிக்க திலங்க என்ற மாணவன் ஹெலிகொப்டர் ஒன்றை தயாரித்துள்ளார்.

பாடசாலையில் நடைபெறும் தொழிநுட்ப தின கண்காட்சியை முன்னிட்டு இவர் குறித்த ஹெலிகொப்டரை தயாரித்துள்ளார்.

தருசிக்க திலங்க, தனது  தந்தையின் தொழிற்சாலையின் கழிவுப் பொருட்களை பயன்படுத்தி 11 நாட்களில் இதனை தயாரித்துள்ளார்.

இதற்காக 250,000 ரூபாய் செலவாகியுள்ளதாகவும் அந்த மாணவன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த ஹெலிகொப்டர் தனியொருவர் பயணிக்கக்கூடிய வகையிலும், 7 அடி உயரத்தைக் கொண்டதாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த  ஹெலிகொப்டர் பறப்பதற்கான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்குவார்களாயின் இதனை முழுமைப்படுத்த முடியும் என தருசிக்க திலங்க  சுட்டிக்காட்டியுள்ளார்.