அரசியல் சூழலை பராமரிக்க வேண்டும் !

1 1
1 1

நாட்டின் அரசியல் சூழலை இன்னும் பராமரிக்க வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கண்டி கெட்டபே ராஜோபவனராமய விகாரதிபதி பூஜிய கெப்பிட்டியாகொட விமலசிறி தேரர் வலியுறுத்தியுள்ளார்.

கண்டி- கெட்டபே ராஜோபவனராமய விகாரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, விமலசிறி தேரரை சந்தித்து அவரது ஆசீர்வாதத்தினை பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பிரதமருடன், விமலசிறி தேரர் கலந்துரையாடலில் ஈடுபட்டபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த ஆட்சியில் சிங்கள- பௌத்த மக்களுக்கு பெரும் சேதம் விளைவிக்கப்பட்டது.

அத்துடன் மக்களை ஒன்றிணைப்பதும் மிகவும் கடினமாக செயற்பாடாக காணப்பட்டது. எனவேதான் புத்த தர்மத்தை பாதுகாக்க துறவிகள் ஆகிய நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்தோம்.

மேலும், துன்பத்தை ஏற்படுத்தியவர்களுக்கு சிறந்த பாடத்தை புகட்ட வேண்டுமென மக்கள் எண்ணியமையால்தான் நீங்கள் ஆட்சிக்கு வர முடிந்துள்ளது.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கில் சிறுபான்மையினரின் வாக்குகளை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தேர்தலில் பெறமுடியாமல் போய்விட்டது.

ஏனென்றால் கோட்டாபய, வடக்கில் ஒரு தனி மாநிலம் உருவாக விரும்பவில்லை. இதனால் அங்கு அவரால் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது.

எனவே சிங்கள- பௌத்த மக்களின் வாக்குகளினால் ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.