அரசாங்கத்தின் கன்னி அமைச்சரவைக் கூட்டம்!

50 sa
50 sa

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரான புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நாளை (புதன்கிழமை) பிற்பகல் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிதாக அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட அனைத்து அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் இடைக்கால வரவு செலவு திட்டம் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

அதேபோன்று புதிய அரசாங்கத்தின் அனைத்து பிரிவுகளினதும் நிர்வாக கட்டமைப்பு மற்றும் அதன் செயற்திறன் தன்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து புதிய அமைச்சரவைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவுப்படுத்தவுள்ளாரென கூறப்படுகிறது.

வழமையாக அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமைகளிலேயே இடம்பெற்று வந்த நிலையில், பதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.