மக்கள் மத்தியில் மீண்டும் அச்ச உணர்வை ஏற்படுத்த பிள்ளையான் தரப்பு முயற்சிக்கின்றது – இரா.சாணக்கியன்

R.Sanakkiyan 4
R.Sanakkiyan 4

வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளருக்கு நோய் உள்ளதாக வைத்திய அத்தியட்சகர் கூறினார். என்னைப் பொறுத்தவரையில் இவருக்கு மனநோய் என்றுதான் பார்க்க வேண்டும். ஏனெனில் இவரின் செயற்பாடு மனநோயாளி போன்று காணப்படுகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டத்தின் போது, தாக்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு உறுப்பினர்கள் மற்றும் திடீரென மயங்கி விழுந்த சபை செயலாளரை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வழங்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2008 ஆம் ஆண்டுக்கு முன்னர் எவ்வாறு மக்களை அச்சுறுத்தி அரசியல் செய்தார்களோ அதேபோன்று மறு உருவம் எடுத்துள்ளதை இன்றைய வாழைச்சேனை பிரதேச சபை வரவு செலவுத் திட்ட்தில் இடம்பெற்ற சம்பவம் நிரூபித்துள்ளது.

தனது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு இல்லை என்பதால் அதை தடுத்து தான் போய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதுடன், அவருக்கு எதிராக இருந்த இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களை காவல்துறையினரை பயன்படுத்தி மிகவும் தவறான முறையில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் பதவிகளை பயன்படுத்தியும், மண் கடத்தல்காரர்களின் ஆதரவையும் பயன்படுத்தி இரண்டு உறுப்பினர்களையும் சிறையில் வைத்து இன்றைய தினம் கூட்டத்தினை சரியான முறையில் ஏற்பாடு செய்யாது சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாழைச்சேனை பிரதேச சபையில் இடம்பெறும் ஊழல்களுக்கு எதிராக கட்சி, மதம், இனம் என்பவற்றுக்கு அப்பால் குரல் கொடுத்த சபை உறுப்பினர்களை எதிர்த்து வந்த நிலையில் வரவு செலவுத் திட்டம் தோல்வியுறும் என்ற நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) என்பவரை வரவழைத்து பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி தன்னிச்சையாக அவர்களது உறுப்பினர்களை உள்ளே எடுத்து ஏதோவொரு வகையில் முடித்துள்ளார்கள்.

கிழக்கு மாகாண ஆளுநர், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மாவட்ட உதவிஉள்ளூராட்சி ஆணையாளர் இதனை உடனடியாக கவனத்தில் கொள்ளவும், ஏனெனில் இது கண்டிக்கப்பட வேண்டிய வியடமாகும். சபை உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று உறவினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.

அத்தோடு இன்றைய சம்பவத்தில் இரண்டு பெண் உறுப்பினர்கள் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு சபையின் செயலாளரும் மயங்கி விழுந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுபோன்று சபை செயலாளர் என்னிடம் எனக்கு உடனடியாக இடமாற்றம் செய்து தருமாறும் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் மற்றும் கட்சயின் தலைவரின் அச்சுறுத்தல்களை என்னால் முகம் கொடுக்க முடியாது ஆகவே எனக்கு இடமாற்றம் பெற்றுத் தரமாறு கண்ணீரோடு என்னிடம் உருக்கமாக கேட்டுக் கொண்டார்.

தாக்குதலுக்கு இலக்காகிய இரண்டு பெண் உறுப்பினர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இவர்களை போதனா வைத்தியசாலைக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எங்களை வைத்தியசாலையில் வைத்தும் ஊசிகள், உணவில் நஞ்சு வைத்து கொலை செய்யக் கூடிய அச்சுறுத்தல் உள்ளதாகவும் தெரிவித்தனர். அத்தோடு பிரதி தவிசாளரின் மனைவியை வீட்டிற்கு சென்று சபை உறுப்பினர் சுதர்சன் அச்சுறுத்தியதாகவும் என்னிடம் தெரிவித்தார்.

வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளருக்கு தொடர்ச்சியாக வரக்கூடிய நோய் உள்ளதாக வைத்திய அத்தியட்சகர் கூறினார். என்னைப் பொறுத்தவரையில் இவருக்கு மனநோய் என்று தான் பார்க்க வேண்டும். ஏனெனில் இவரின் செயற்பாடு மனநோயாளி போன்று காணப்படுகின்றது என்றார்.

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டு தடவைகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இரண்டு சபை உறுப்பினர் விளக்கமறியிலில் உள்ள நிலையில் எதிர்தரப்பினர் சபையை நடத்தக் கூடாது என்று சபை மண்டப நுழைவாயிலை மூடி போராட்டம் நடாத்தினார்கள்.

இதன் நிமிர்த்தம் பல்வேறு குழப்ப நிலைகளுக்கு மத்தியில் ஆளும் கட்சி உறப்பினர்கள் சபை மண்டபத்திற்கு தவிசாளரை கொண்டு செல்லும் போது எதிர்தரப்பு உறுப்பினர்கள் தடுக்க முற்பட்ட வேளையில் இரண்டு உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாக தாக்குதலுக்கு இலக்கான பெண் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதில் வாழைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர்களான திருமதி.பி.லெட்சுமி, எம்.எல்.நபீரா மற்றும் வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் திருமதி.ப.லிங்கேஸ்வரன் திடீரென மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் எஸ்.சரவணபவன் மற்றும் சபை உறுப்பினர்கள் சகிதம் சென்று பார்வையிட்டதுடன், இவர்களை உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வைத்திய அத்தியட்சகரிடம் கேட்டுக் கொண்டார்.

அத்தோடு வாழைச்சேனை நிலையத்திற்கு சென்று குறித்த இரண்டு சபை உறுப்பினர்களை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அத்தோடு எட்டு சபை உறுப்பினர்களால் காவல்துறையினரிடம் முறைப்பாடுகளும் போடப்பட்டது.

01 9 4
01 5
01 7 2
01 8 5
01 2 3
01 4 1
01 3
01 1