பொதுத் தேர்தல் குறித்து மைத்திரி- மஹிந்த

wete
wete

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் கீழ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கலந்துரையாட நடவடிக்கை எடுத்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், இரு கட்சிகளும் பொதுக் கூட்டணியின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. தற்பொழுது, பொதுத் தேர்தலில் போட்டியிடும் முறைமை குறித்தும், வேட்பாளர்கள் நியமனம் தொடர்பிலும் இரு கட்சிகளும் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் மத்திய செயற்குழுவில் இரு கட்சிகளும் கூட்டணியில் போட்டியிடுவதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன், முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ ல.சு.க.யின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.