இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் இன்று இல்லை

1 parliam
1 parliam

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இராஜாங்க அமைச்சர்கள் 20 பேர் நியமிக்கப்படவுள்ளதாகவும், அவர்கள் இதுவரை தெரிவு செய்யப்படாதுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இராஜாங்க அமைச்சர்களின் சத்தியப்பிரமாணம் இன்று 25 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கடந்த அமைச்சரவை அமைச்சர்கள் நியமனத்தின் பின்னர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.