தமிழ் அரசியல் கைதிகளின விடுதலையை வலியுறுத்தி சர்வமத தரப்பினருடன் கலந்துரையாடல்!

PHOTO 2020 12 31 18 51 24 696x313 1
PHOTO 2020 12 31 18 51 24 696x313 1

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக சர்வமத கலந்துரையாடல் நிகழ்வை அரசியல் கைதிகளின் விடுதலைக்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

யாழ். நாவலர்வீதியில் அமைந்துள்ள தியாகி அறக்கட்டளை நிலைய மண்டபத்தில் நாளை முற்பகல் 10.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் குறித்த சர்வமத கலந்துரையாடல் நிகழ்வு தொடர்பில் குரலற்றவர்களின் குரல் அமைப்பு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

ஒன்றுபட்டு எமது உறவுகளை சிறை மீட்போம் எனும் தொனிப் பொருளில் ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினரால், அரசியல், இன, மத பாகுபாடு கடந்து மனிதாபிமான அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் செயற்பாடுகளின் தொடர்ச்சியாக சர்வமத தரப்பினருடனான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறை இருட்டில் இருக்கும் எமது உறவுகளை தற்கால கொரோனா வைரஸ் தொற்றும் வெகுவாக பாதித்துவரும் நிலையில் கருணை அடிப்படையில் இத்தருணத்திலாவது அவர்களை விடுவிக்க மனிதாபிமான முறையில் வலியுறுத்தும் வகையில் சர்வமத பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்வு முன்னெடுக்கப்பட உள்ளது.

சர்வமதத் தரப்பினரை இணைத்து மேற்கொள்ளப்படும் இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்டத்தில் உள்ள சர்வமத பிரதிநிதிகள் மற்று அரசியல் கைதிகளின் குடும்பத்தார் பங்குபற்றவுள்ளனர்.