இந்தியாவுக்கு சவாலான ஓட்ட எண்ணிக்கை _ நிர்னைத்த மேற்கிந்திய தீவுகள்

indvswi 2ndt20 1
indvswi 2ndt20 1

இந்தியா – மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றுவரும் நிலையில் இந்திய அணிக்கு 316 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியைப் பெற்று சமநிலையில் உள்ளன.

இந்நிலையில் தீர்மானம்மிக்க மூன்றாவதும் இறுதியுமான போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒடிசா மாநிலத்தின் ஹட்டாக் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பின்னர் துடுப்பெடுத்தாடிய நடு வரிசை வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்து வேகமாக ஓட்டத்தை குவித்தனர்.

இதன்படி மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 315 ஓட்டங்களைப் பெற்றது.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக, நவ்தீப் ஷைனி 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாகுர், மொஹம்மட் ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்நிலையில், 316 என்ற வெற்றியிலக்கை நோக்கி இந்திய அணி துடுப்பெடுத்தாடி வருகிறது. அதன்படி சற்றுமுன்னர் வரை இந்திய அணி 26பந்து பரிமாற்றம் நிறைவில் ஒரு இலக்கினை இழந்து 146 ஓட்ட்ங்களை பெற்று துடுப்பெடுத்தாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது