கோட்டாவின் ஹிட்லர் முகத்திற்கு மக்கள் மத்தியில் அதிருப்தி! விக்ரமபாகு

vikrama
vikrama

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சர்வதிகாரத்தினால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது முகம் பதிந்த ஒளிபடத்தை காட்சிப்படுத்தி,  தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டாமென கூறியுள்ளார்.

இதற்கு காரணம்,  ஜனாதிபதியின் ஒளிபடத்தை காட்சிப்படுத்தினால் வாக்குகளின் எண்ணிக்கை குறைவடையும்.  ஆகவேதான் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு ஏகாதிபத்திய ஆட்சி மீது வெறுப்பு ஏற்பட்டிருந்தது. ஆனாலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்த பின்னர்தான், வெறுப்புணர்வு ஓரளவு குறைந்து காணப்படுகின்றது.

அதாவது கோட்டாவின் ஹிட்லர் முகத்தை முன்நிறுத்தி இராணுவம் சர்வதிகாரம் என்றதன் அடிப்படையில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்தால் மக்களிடம் அதிருப்தி ஏற்படும்.

ஆகவேதான் மஹிந்த ராஜபக்ஷவை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரங்களில் பொதுஜன பெரமுன ஈடுபட்டு வருகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.