1000கோடி ரூபா கோரி மான நஷ்ட வழக்கு தொடருவாராம் சுமந்திரன்!

sumo
sumo

நுண்நிதிக் கடனால் இடம்பெறும் தற்கொலைகள் மற்றும் வறுமைக்குள் வாடும் பெண் தலைமை குடும்பங்களின் மேம்பாட்டுக்காக கனடாவில் பல அமைப்புக்கள், நலன்விரும்பிகளால் சேகரித்து தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக வழங்கப்பட்ட 20 கோடியே 20 இலட்சம் (212 மில்லியன்) ரூபாவுக்கு என்ன நடந்தது என முன்னாள் தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் அண்மையில் கேள்வியெழுப்பியிருந்தனர் நிலையில் அவர் தமிழரசு கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த நிதியினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தானே கனடாவிலிருந்து பெற்று வந்ததாக குறிப்பிட்டார். ஆனால் நுண்நிதிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கோ பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கோ குறித்த நிதியிலிருந்து இதுவரை எந்த உதவிகளும் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் தமிழரசுக்கட்சி ஊடாகக் கிடைத்த நிதிக்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை செய்வதற்கு அழுத்தம் கொடுப்போம் என தெரிவித்திருந்தார்.

தமிழரசுக் கட்சியின் படைத்தல், காத்தல், மறைத்தல், அருளள், அழித்தல் ஆகிய ஐந்து தொழில்களையும் ஒருவரே கையில் எடுத்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் சுமந்திரன் மீதும் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த நிலையில் அண்மையில் சுமந்திரன் தனியார் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் குறித்த விடையம் தொடர்பில் தன்மீது வீண் பழி போடப்பட்டுள்ளதாகவும் திருமதி விமலேஸ்வரி ஸ்ரீகாந்தறூபன் அவர்களுக்கு எதிராக 1000கோடி ரூபா நஷ்ட்ட ஈடு கோரி மான நஷ்ட வழக்கு தொடரவிருப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.