நாட்டில் நேற்று ஐந்து புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

02 1

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஐவர் நேற்று (புதன்கிழமை) அடையாளம் காணப்பட்டனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 839 ஆக அதிகரித்துள்ளது.

ஐக்கிய அரபு இராஜ்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இருவரும் சென்னையிலிருந்து திரும்பி வந்த ஒருவரும் சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த இருவரும் உள்ளடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை 291 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த 13 பேர் நேற்று வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியிருந்தனர்.

இதனையடுத்து, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்து 537 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 68 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு இந்த வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கந்தகாடு சிகிக்கை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இதுவரை 604 நபர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வருகை தந்த 939 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.