விடுதலைப் புலிகள் அழைத்ததன் பேரிலேயே நோர்வே சமாதான பேச்சுவார்த்தையில் நடுநிலைமை வகித்தது- எரிக் சொல்ஹெய்ம்

625.500.560.350.160.300.053.800.900.160.90 12 2
625.500.560.350.160.300.053.800.900.160.90 12 2

விடுதலைப் புலிகள் விரும்பி தம்மை அழைத்ததன் காரணத்தாலேயே தமது நாடு அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதான பேச்சுக்களில் நடுநிலைமை வகித்ததாக நோர்வே நாட்டின் முன்னாள் அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள தனியார் ஊடகம் ஒன்றிற்கு அவர் அவர் வழங்கிய விசேட நேர்காணல் ஒன்றிலேயே குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார் .

அதேவேளை அந்த நேர் காணலில் மேலும் கருத்து வெளியிட்ட அவர் இலங்கைக்கான சமாதான அனுசரணைப்பணியில் பிரான்ஸ் பங்கேற்க வேண்டுமென அப்போதைய அரசதலைவர் சந்திரிகா விரும்பியதாகவும் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டார்.

இருந்த போதிலும் இலங்கைக்கான அனுசரணை பணியில் நோர்வேயே பங்கெடுக்கவேண்டுமென விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் விரும்பியதன் அடிப்படையிலேயே நோர்வே இந்தப்பணியில் இறங்கியதாகவும் எரிக்சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்க்காக 1998 ம் ஆண்டு நோர்வேயில் உள்ள தமது அலுவகத்திற்கு நேரில் வருகைதந்த தமிழீழ விடுலைப்புலிகள் அமைப்பினர் தமக்கு இந்த வேண்டுகோளை முன்வைக்கவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .

அதே சமயம் நோர்வேயின் தலையீட்டுடன் நாட்டில் அப்போதிருந்த ஜனாதிபதி சந்திரிகா மற்றும் பிரதமர்ரணில் விக்ரமசிங்க ஆகியோரது தலைமையிலான அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையில் சமாதான பேச்சுக்கள் பல கட்டங்களாக இடம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .