தேர்தலில் வாக்கு யாருக்கு?- தேரர் விளக்கம்

4 nh
4 nh

எனது அமைதிக்குள் அர்த்தம் இருக்கின்றது எனவும், அய்யோ இந்த தேரர் இதுபற்றியெல்லாம் பேசினார் அல்லவா என நினைவுக்கு வந்தால், இந்த நாட்டிலுள்ள ஒரு பௌத்தர்கள் யாருக்கு வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என தீர்மானம் எடுப்பார் எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சகோதர மொழி இன்றைய தேசிய வார இதழொன்றுக்கு தேரர் வழங்கியுள்ள விசேட செவ்வியிலேயே இதனைக் கூறியள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் யாருக்கு ஆதரவை வழங்குகின்றீர்கள் என வினவியதற்கே தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவருக்கு கொடுங்கள், இவருக்கு கொடுக்க வேண்டாம் என நேரடியாக எனக்கு கூற முடியாது. இருப்பினும், எமது நாடு எதிர்நோக்கியுள்ள ஆபத்துக்கள் குறித்து பேசியுள்ளேன். மக்களுக்கு அது நினைவுக்கு வர வேண்டும். எனது அமைதிக்குள் அந்த அர்த்தங்களைப் புரிந்துகொள்ளவேண்டும். நான் பேசிய விடயங்கள் நினைவுக்கு வந்தால் போதும், யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

இந்த தீர்மானத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பு முதல் இடத்தில் காணப்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

வஹாப்வாதிகள், சலபிவாதிகள், இக்வான் முஸ்லிமூன், ஜமாஅதே இஸ்லாமி, தவ்ஹீத் ஜமாத் போன்ற கடும்போக்கு, விசம் கொண்ட கருத்துக்களை உடைய குழுக்கள் எந்தப் பக்கம் உள்ளது என்பதை மக்கள் பார்க்க வேண்டும். சஹ்ரான் மேற்கொண்ட தாக்குதலை மக்கள் கண்முன் எடுக்க வேண்டும். அவர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளது இந்த நாட்டின் இருதயத்துக்கு என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

இந்த அடிப்படைவாதத்தை போசித்தவர்கள் யார்? அரசியல் புகழிடம் கொடுத்தவர்கள் யார்? என்பதைப் பார்க்க வேண்டும். இவ்வாறானவர்கள் எந்த அரசியல் கட்சியின் பக்கம் முகாம் இட்டுள்ளனர் என்பதைப் பார்க்க வேண்டும். அந்த கட்சிக்கு வாக்களிக்க முன்னர் இரு தடவைகள் சிந்தித்துப் பார்க்க மக்கள் கடமைப்பட்டுள்ளனர்.

யுத்தம் முடிவடைந்து 2015 வரையான காலப்பகுதியில் நாட்டில் குண்டுகள் வெடிக்கவில்லை. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் அடிப்படைவாத குழுக்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருந்தவர். நாம் இதுபற்றி அவரிடம் அறிவித்த போது, யுத்தம் முடிந்த கையுடன் எம்மை கொஞ்சம் ஓய்வாக இருக்க இடமளியுங்கள் தேரரே என அவர் கூறினார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் இந்த அடிப்படைவாத பிரச்சினையை மிகவும் அவதானத்துடன் இருந்தவர் எனவும் ஞானசார தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.