ஓரவஞ்சனையுடன் அரசு செயற்படுகிறது சிவாஜிலிங்கம் சீற்றம்!

20201111 164723
20201111 164723

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தன் சிறைச்சாலையிலிருந்து பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டுஅபிவிருத்தி அலுவலகத்தை திறக்க முடியுமாக இருந்தால் ஏன் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என சிவாஜிலிங்கம் கேள்வி?எழுப்பியுள்ளார்


இன்று(11)யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்படி கேள்வி எழுப்பியுள்ளார்11

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலைசெய்யப்பட்ட சந்தேகத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இன்றையதினம் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு அலுவலக திறப்பு விழாக்காக சிறைச்சாலையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலைமை ஏன் இந்ந அரசானது தமிழ் அரசியல் கைதிகள் மீது காட்டப்படக்கூடாது என சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பி யுள்ளார் .

அரசாங்கத்தினுடைய ஆட்களுக்கு ஒரு நீதியும் ஏனையவர்களுக்கு ஒரு நீதியுமாக இந்த அரசு செயற்படுவதாக குற்றச்சாட்டியுள்ள சிவாஜிலிங்கம் எனினும் இவ்வாறான சம்பவங்களை அரசு நிறுத்துவதோடு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.