33 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரச உடமை

5 nju
5 nju

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில் 33 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரச உடமை ஆக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 12.5 சதவீத வாக்குகளை பெற தவறியமையே இதற்கு காரணமாகும். இதனால் 33 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரச உடமை ஆக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமர் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சார்பில் 20 வேட்பாளர்களும், 15 பேர் சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் 50 ஆயிரம் ரூபாவும், சுயேட்சை வேட்பாளர் 75 ஆயிரம் ரூபாவும் கட்டுப்பணம் செலுத்தினர்.

அதற்கு அமைவாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 12.5 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குளை பெறமுடியாமல் போன 33 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரச உடமையாக்கப்பட்டது.