சாவகச்சேரி காவல்துறை பிரிவில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலில் இரண்டு பேர் கைது!

IMG b09370c6c56d5d14da8939cd135f8e34 V 1 1
IMG b09370c6c56d5d14da8939cd135f8e34 V 1 1

சாவகச்சேரி காவல்துறை பிரிவில் கல்வயல், மட்டுவில் பகுதிகளில் கடந்த2ஆம் திகதி இரவு புரவி புயலால் கடும் மழை பொழிந்து கொண்டிருந்த வேளை 7 வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட கும்பலில் இரண்டு பேர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் மற்றும் அளவெட்டியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 7 தங்கப் பவுண் நகைகள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டன. அத்துடன் 3 மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் மூவர் மட்டும் சாவகச்சேரி காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.


முகங்களை மறைத்தவாறு வீடுகளுக்குள் புகுந்த கொள்ளையர்கள் ஐவர்வயோதிபர்களை அச்சுறுத்தி தாலிக்கொடி உள்ளிட்ட 15 பவுண் தங்க நகைகளும் 2 லட்சம் ரூபாய் பணமும் கொள்ளையிடப்பட்டன
என்று சாவகச்சேரி காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய காவல்துறை அத்தியட்சகரின் கீழான பிரதான காவல்துறை பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அவர்களின் விசாரணைகளில் சுன்னாகம் மற்றும் அளவெட்டியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் கொள்ளையிட்ட நகைகளை வாங்கிய குற்றச்சாட்டில் பெண் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

இன்று வரையான விசாரணையில் கொள்ளையர்களிடமிருந்து 7 தங்கப் பவுண் நகைகளும் 30 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், சந்தேக நபர்களின் உடமையிலிருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன. கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன
.
சந்தேக நபர்கள் இருவரும் சாவகச்சேரி காவல்துறை நிலையத்தில் மாவட்ட குற்றத்தடுப்புப் காவல்துறையினரால் முற்படுத்தப்பட்டுள்ளனர். சான்றுப்பொருள்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

IMG b09370c6c56d5d14da8939cd135f8e34 V 1