முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் அத்துமீறிய செயலால் பாதிக்கப்படும் உள்ளூர் மீனவர்கள் கண்டுகொள்ளாத கடற்படை!

mullaitivu sea indian dolar 12 1
mullaitivu sea indian dolar 12 1

முல்லைத்தீவு கடலில் அண்மைய நாட்களாக இந்திய றோலர்களின் அத்துமீறிய செயலால் தாம் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகி வருவதாகவும் இதனை கட்டுப்படுத்துவதற்கு கடற்படை எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் உள்ளூர் மீனவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்

முல்லைத்தீவு கடலை நம்பி வாழும் சுமார் 5000 மீனவ குடும்பங்கள் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்வாதாரத்துக்கு போராடிவரும் நிலையில் தற்போது இறால் சீசன் ஆரம்பிக்கும் நிலையில் அவற்றை இந்தியன் இழுவை படகுகள் வந்து அளித்து வருகின்றதாகவும் இதனை தடுத்துநிறுத்த மீன்பிடி அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் தெரியப் படுத்தியும் எந்தவிதமான நடவடிக்கையும் இன்று வரைக்கும் எடுக்கப்படவில்லை என மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்

தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்க தவறி வருவதால் தாம் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும் நிலைமை நீடிக்கும் பட்சத்தில் 15 ம் திகதி முதல் போராடடத்தில் குதிக்கப்போவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்

இன்று மாலை வேளையிலும் பல றோலர் படகுகள் முல்லைத்தீவு கடற்கரையை அண்டிய பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன தொடர்ச்சியாக இரவு வேளையிலும் இவ்வாறு மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றபோதும் கடற்படை அவர்களை விரட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

mullaitivu sea indian dolar 10
mullaitivu sea indian dolar 9
mullaitivu sea indian dolar 12
mullaitivu sea indian dolar 12 1