வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்

received 794447804435758
received 794447804435758

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்றைய நாளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆனது இன்று 1373 ஆவது நாளாக தொடர்ந்து போராடடத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய நாள் சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். சர்வதேச மனித உரிமை நாளில் எமது உறவுகளின் நிலை அறியும் அடிப்படை உரிமைகளை கூட இழந்து தவிக்கின்றோம் என்கின்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

முல்லைத்தீவில் சற்று முன்னர் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பங்கெடுத்து இருப்பதோடு போராட்டத்தின் இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் உடைய உயர்ஸ்தானிகர் அவர்களுக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள உறவுகள் தொடர்போராட்டம் நடாத்திவரும் கட்டிடத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றவர்கள் மனித உரிமைகள் நாாளில் உரிமைகள் மறுக்கப்பட்டு வீீீீதியில் நாம்,குற்றம் செய்பவர்களுக்கு யாரும் உடந்தையாக இருக்காதீர்கள் ,கோட்டா அரசே நீ கொண்டு போனவர்கள் எங்கே போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கிய வாறும் எங்கே எங்கே உறவுகள் எங்கே போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் கலந்து கொண்டுள்ளார்.