நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக உரிமைகளை வெற்றிகொள்வதற்கும் ஒன்றிணையுமாறு பிரதமர் அழைப்பு!

Mahintha 720x450 1

சுபீட்சத்தின் நோக்கு அரச கொள்கையின் ஊடாக அனைத்து மக்களதும் மனித உரிமைகளை பாதுகாத்து நாட்டினதும் குடிமக்களினதும் நற்பெயருக்காக அரசாங்கம் என்ற ரீதியில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஆட்சிக்கு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒழுக்கமான முறையில் இலங்கை மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்க கட்டுப்பட்டிருந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்

கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியிலும் சமூகத்தின் உரிமைகள் மீறப்படாத வகையில் அடிப்படை உரிமைகள் போன்றே தேவைகளுக்காகவும் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் எதிர்நோக்கியுள்ள கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதைப் போன்றே நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக உரிமைகளை வெற்றிகொள்வதற்கும் இம்முறை மனித உரிமைகள் தினத்தில் கைகோர்க்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.