இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலை கண்டித்து முல்லைத்தீவு மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.

mullaitivu protest 10 1

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து முல்லைத்தீவில் கடற்தொழில் அமைப்புக்கள் மீனவர்கள் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியதோடு மாவட்ட செயலகம் முன்பாக கொட்டகை அமைத்து தொடர் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்  

mullaitivu protest 10

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறலால் முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த கோரி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர் .

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம்,மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனம் ,தேசியமீனவர் ஒத்துழைப்பு இயக்கம்,முல்லைத்தீவு பிரதேச வர்த்தக சங்கம்,முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்,கரை துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கம்,பனை தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கம்,முல்லைத்தீவு சிகை அலங்கரிப்பாளர் சங்கம்,கரைதுறைப்பற்று கிராமிய அபிவிருத்தி சங்கம் ஆகியன  போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளார்கள்

mullaitivu protest 8

இந் நிலையில் முல்லைத்தீவு நகரபகுதியில் உள்ள வணிக நிலையங்கள் சந்தைகள்,அனைத்தும் பூட்டப்பபட்டு எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்

மீனவர்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது கொட்டும் மழையிலும் முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து ஆரம்பமாகிய கவனயீர்ப்பு பேரணி கடற்கரை வீதிவழியாக மாவட்ட செயலகம் வரை சென்றடைந்து மாவட்ட செயலகத்தின் முன்னால் கவனயீர்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதுடன் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களுக்கான மனுவினை கடற்தொழிலளார் சங்கங்களின் சமாச தலைவர் மற்றும் சம்மேளன தலைவர் ஆகியோரால் கையளிக்கப்பட்டுள்ளது.

mullaitivu protest 12

மனுவின் பிரதிகள் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர், கடற்தொழில்அமைச்சர், வடமாகாணஆளுனர், பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு அனுப்பிவைத்துள்ளார்கள்.

கொரோனா சட்டத்திற்கு அமைவாக சமூக இடைவெளிகளை பேணி முகக்கவசங்களை அணிந்து கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள். இதன்போது தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராச,நாடாளுமன்ற உறுப்பினர்களான, செ.கஜேந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், வினோ நோகராதலிங்கம், ஆகியோர் கலந்துகொண்டுள்ளதுடன் அவர்களுக்கும் மீனவர்களின் கோரிக்கை அடங்கிய மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

mullaitivu protest 11

முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா ,முன்னாள்  வட மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன்,ஆ.புவனேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் வாதிகளும் கலந்துகொண்டுள்ளதுடன் பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீனவர்கள் மீனவ குடும்பங்கள் என பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.

மீனவர்களின் இந்த போராட்டம் தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்படும் என ஏற்கனவே அறிவித்ததற்கு அமைய  மாவட்ட செயலத்திற்கு முன்னால் பந்தல் அமைந்துதொடர் போராட்டத்தை  மேற்கொண்டுள்ளார்கள்.