மீனவர்களின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்து முல்லைத்தீவில் பூரண கடையடைப்பு!

harththaal 6

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து முல்லைத்தீவில் கடற்தொழில் அமைப்புக்கள் மீனவர்கள் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியதோடு மாவட்ட செயலகம் முன்பாக கொட்டகை அமைத்து தொடர் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்

harththaal 17

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இதுவரை அரசினால் எந்த   தீர்வும் கிடைக்காத  நிலையில் இன்று   இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினை எதிர்த்து திட்டமிட்டபடி போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாகவும் மாவட்டத்திலுள்ள அனைத்து தரப்பினரையும் தமது போராட்டத்துக்கு  ஆதரவு வழங்குமாறும்   கோரிக்கை.நேற்று விடுத்துள்ளனர்

harththaal 16

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு  சங்க சமாசத்தில்  நடாத்திய ஊடக சந்திப்பில்  முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு  சங்க சமாசத்தின் தலைவர் மரியதாஸ் பிரெக்றிக் ஜோன்சன் குறித்த கோரிக்கையினை முன்வைத்திருந்தார்

harththaal 15

இதற்கமைவாக முல்லைத்தீவில் இன்று போராட்டம் இடம்பெற்றுவரும் அதே நேரத்தில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம்,மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளனம் ,தேசியமீனவர் ஒத்துழைப்பு இயக்கம்,முல்லைத்தீவு பிரதேச வர்த்தக சங்கம்,முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்,கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கம்,பனைதென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கம்,முல்லைத்தீவு சிகை அலங்கரிப்பாளர் சங்கம்,கரைதுறைப்பற்று கிராமிய அபிவிருத்தி சங்கம் ஆகியன  போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளார்கள்

harththaal 3

இந்நிலையில் முல்லைத்தீவு நகரபகுதியில் உள்ள வணிக நிலையங்கள் சந்தைகள்,அனைத்தும் பூட்டப்பபட்டு பூரண ஆதரவு வழங்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தமது போக்குவரத்து சேவைகளை முழுமையாக நிறுத்தி தமது பூரண ஆதரவினை வழங்கியுள்ளனர்

இந்நிலையில் இன்று முழுநாளும் முல்லைத்தீவு நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது