பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட மணிவண்ணன்

130884647 1090725361349102 6280360565480453569 o
130884647 1090725361349102 6280360565480453569 o

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை சுப்பர்மடம் கடற்றொழிலாளர்களின் அழைப்பை ஏற்று நேற்று முன்தினம்(15) சட்டத்தரணி வி.மணிவண்ணன் விஜயம்  ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த இடத்திற்கு நேரடியாக சென்ற அவர், அவ் மக்களின் பிரச்சனைகள்  தொடர்பில் கேட்டறிந்து அதற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் போது குறித்த கடல் தொழில்சங்கத்தின் பிரதிநிதிகள் இதற்கு முதல் பலரும் வந்து பார்வையிட்டு உதவிகள் செய்வதாக கூறி இதுவரை எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்தனர் .

தனக்கு எந்த விதமான நிதி ஒதுக்கீடுகளும் இல்லை. இருந்த போதும் எமது உறவுகளின் உதவியுடன் உங்களுக்கு உதவுவதற்கு முயற்சி செய்கிறேன். நான் எந்த விதமான உத்தரவையும் உங்களுக்கு தரவில்லை. இருந்த போதும் முழுமையாக முயற்சி செய்கிறேன் மணிவண்ணன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.