மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால் நாட்டை முடக்க நேரிடும் – ஹரித அளுத்கே

aa857ac0 96631aa7 haritha aluthge 850x460 acf cropped
aa857ac0 96631aa7 haritha aluthge 850x460 acf cropped

மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால், எதிர்வரும் நாட்களில் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட நேரும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் வைத்தியர் ஹரித அளுத்கே இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டால், உடனடியாக அங்குள்ள மக்கள் வேறு இடங்களுக்கு செல்ல முயற்சிக்கின்றனர்.

இதனை தடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் திறமைப்பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

சுகாதாரத்துறையினரும் வினைதிறனாக செயற்பட வேண்டும்.

மக்களிடம் இருந்து இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளை எதிர்பார்க்கவில்லை.

இந்தநிலைமை தொடர்ந்தால் மீண்டும் நாடு முழுவதையும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.