நாட்டில் வீதி விபத்தினால் ஒரே நாளில் 10 பேர் உயிரிழப்பு- அஜித் ரோஹன

625.500.560.350.160.300.053.800.900.160.90 1 5
625.500.560.350.160.300.053.800.900.160.90 1 5

நாட்டில் நேற்று (வியாழக்கிமை) மாத்திரம் 10பேர், வீதி விபத்துக்களினால் உயிரிழந்துள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அஜித் ரோஹன மேலும் கூறியுள்ளதாவது, “வீதி விபத்துக்களினால் 7பேர் நேற்று உயிரிழந்தனர்.

அதேபோன்று கடந்த புதன்கிழமை வீதி விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் சிகிச்சைப்பெற்று வந்த மூவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதற்கமைய நேற்று மாத்திரம் 10பேர் வீதி விபத்துக்களினால் உயிரிழந்துள்ளனர்.

அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் சாலை விதிகளை மீறி செயற்படுகின்றமையே வீதி விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

ஆகவே வாகன செலுத்துபவர்கள், வீதி சட்டமுறைகளை பின்பற்றி செயற்பட்டால், குறித்த விபத்துக்களை ஓரளவு தவிர்க்க முடியும்.

இதேவேளை நாடு முழுவதும், வீதி சட்ட விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.