புரவி புயலின் தாக்கத்தில் இருந்து விடுபடாத நிலையில் மன்னார் மாவட்ட மீனவர்கள்!

IMG 7136
IMG 7136

வடக்கு கிழக்கை அதிகளவில் பாதித்த புரேவி புயல் கரையை கடந்து சொன்றாலும் அதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் புரவி புயலின் கோர விளைவுகளை கடந்து செல்ல முடியாத நிலையிலேயே இன்றுவரை உள்ளனர்

மீன் பிடியை வாழ்வியல் தொழிலாக கொண்ட மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகள் முழுவதுமாக கடல் நீரால் சூழப்பட்டது. மீன் பிடியை வாழ்வாதாரமாக கொண்ட பல மீனவர்களின் மீன்பிடி உபகரணங்கள் வலைகள் படகுகள் கடல் அலைகளால் நொருக்கப்பட்டும் பல மீனவ பெண்களின் வாழ்கை வறுமையால் நெருக்கப்பட்டும் இன்றுவரை என்ன செய்வது என்று அறியாமல் தவிக்கின்றனர் மன்னார் மாவட்ட மீனவர்கள்

இவை ஒரு புறம் இருக்க மீனவர்களின் வலைகளிலும் ரோலர் படகுகளின் மடிகளில் மிஞ்சுகின்ற சின்ன சின்ன மீன்களை சேகரித்து அவற்றை கருவாடாக்கி வாழ்வாதாரத்தை கொண்டும் செல்லும் பெண்களின் நிலை கேள்வி குறியாகவே உள்ளது

நாள் ஒன்றுக்கு 150 ரூபா தொடக்கம் 200 ரூபா என சிறியதொரு வருமானத்திற்காக காலை தொடக்கம் மாலை வரை மீனவர்களுக்கு வலை சீராக்கி கொடுத்தும், வலைகளில் கைவிடப்படுகின்ற சிறிய மீன்களை கருவாடாக மாற்றி அவற்றை விற்பனை செய்து வாழ்வாதாரத்தை கொண்டு சென்ற பெண்கள் கடந்து சென்ற புரேவி புயலால் தொழிலையும் இழந்து வாழ்வாதாரத்தையும் இழந்து செய்வதாறியாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்

தொடர்ந்து மழையான காலநிலை காணப்படுவதாலும் மீனவர்கள் அதிகளவில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடாமையினாலும் வாழ்கையை கொண்டு செல்ல முடியாத நிலையில் வங்கிகளில் கடன்கள் பெற்று கூட வாழ்ககையை கடந்து செல்ல முடியாத நிலையில் தங்களுக்கு தற்காலிக நிவரணங்களையோ அல்லது மாற்று தொழில் வாய்பயாவது வழங்குமாறு மீனவ பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

IMG 7135
IMG 7136
IMG 7133
IMG 7137
IMG 7139