மன்னார்-கிளிநொச்சி மாவட்டங்களில் வன வள திணைக்களம் சுவீகரித்துள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்

IMG 7141
IMG 7141

மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (18) மதியம் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது. -மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் குழுமத்தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இடம் பெற்றது.

  
 கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஜெயபுரம் வடக்கு மற்றும் ஜெயபுரம் தெற்கு மற்றும் மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள மாதா கிராமம்,குஞ்சுக்குளம், பெரியமுறிப்பு ஆகிய கிராமங்களில் உள்ள மக்களின் பாராம்பறிய காணிகள் தற்போது வன வள திணைக்களம் சுவீகரித்து வைத்துள்ளமை தொடர்பில் பாதீக்கப்பட்ட கிராம மக்களினால் தெரிய படுத்தப்பட்டது.

குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கிளிநொச்சி ஜெயபுரம் தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் சந்திரபோஸ் தெரிவிக்கையில் 1983ஆம் ஆண்டு யூலைக்கலவரங்களின் விளைவாக மலையகப் பகுதியிலிருந்து 548 குடும்பங்கள் அகதிகளாக வெளியேறி, இடம் பெயர்ந்து இக்கிராமத்திற்கு வந்து குடியேறி வசித்து வருகின்றோம். இங்கு வந்த போது எங்களுக்கு 1½ ஏக்கர் மேட்டுக்காணியும் அதே போல 1 ஏக்கர் வயல்காணியும் தருவதாக அரச அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது. இருப்பினும் அதற்கான ஆவணங்கள் பின்னர் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

 
 நாம் இக்கிராமத்தில் எமது குடும்பங்களுக்கென ஒதுக்கப்பட்டுத்தந்த மேட்டுக்காணிகளில் குடியேறியதோடு, வழங்கப்படுவதாக கூறிய வயல் காணிகளையும் துப்பரவு செய்து விவசாய செயற்பாடுகளையும் செய்து வந்தோம். இந்நிலையில் 1990ஆம் ஆண்டு, 1987ஆம் ஆண்டு, பிற்பாடு 2009ஆம் ஆண்டு ஆகிய காலப்பகுதிகளில் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக பல்வேறு இடப்பெயர்வுகளைச் சந்தித்தோம. குடும்பங்கள் பயத்தின் காரணமாக இந்தியாவிற்கும் புலம் பெயர்ந்து சென்றுவிட்டார்கள்.


 இறுதி யுத்தம் நடைபெற்ற 2008ம்ஆண்டு நாம் எமது கிராமத்தைவிட்டு முற்றுமுழுதாக இடம்பெயர்ந்து பல இடப்பெயர்வுகளைச் சந்தித்து இறுதியாக நலன்புரிமுகாம்களில் தங்க வைக்கப்பட்டு, 2009 கார்த்திகை மாதம் அரசாங்கத்தால் சொந்தஇடத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டோம். எமது கிராமத்திற்கு மீளவர பல ஆண்டுகள் சென்றதால் எமது கிராமம் மற்றும் வயல்காணிகள் சிறுகாடுகளாகிவிட்டன.

 
நாங்கள் எமது கிராமத்தில் வசித்த காலத்தில், காணிக்குரிய ஆவணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் பூநகரிப் பிரதேசசெயலக அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டாலும், யுத்த காலத்தின்போது பூநகரி பிரதேசசெயலகம் பெரிதாக இயங்காததால் அதிகாரிகளால் எமக்கான காணிகளின் ஆவணங்களை வழங்க முடியாது போய்விட்டது. மேலும் இச்செயலகத்தின் ஆவணங்களும் யுத்தம் மற்றும் இடப்பெயர்வு காரணமாக இல்லாது போய்விட்டதாக அறிகின்றோம். எமது மேட்டுக்காணிகளுக்கான ஆவணங்கள் இருப்பினும் எமது வயல் காணிகள் தொடர்பிலான ஆவணங்களைப் பெறமுடியாதநிலையே காணப்படுகின்றது. இந்நிலையில் தற்போது 510 குடும்பங்கள் இக்கிராமத்தில் வசித்து வருகின்றோம்.

 
 எமது வயல்காணிகளை விவசாய நடவடிக்கைக்காக நாம் துப்பரவு செய்ய முற்பட்டபோது, காணிகள் காடுகளாக வளர்ந்துள்ளதால் இக்காணிகள் தமக்குரிய காணியென வனவளப்பிரிவினரால் தடுக்கப்பட்டுள்ளோம். பல போராட்டங்களுக்குப் பிற்பாடு தற்போது 100ஏக்கர் விவசாயக்காணிகளை மட்டும் விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எமது மக்களுக்கு முன்னர் வழங்குவதாக தெரிவித்த வயல்காணிகளை முழுவதுமாக விடுவிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொறுப்பான அமைச்சர் மற்றும் ஐனாதிபதி ஆகியோர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு எமது வயல்களை நாங்களே செய்து எமது நாளாந்த ஜீவனோபாயத்தைக் கொண்டு செல்லுவதற்கு ஆவன செய்துதருமாறு மிகவும் தாழ்மையுடன் எமது கோரிக்கையை முன்வைக்கின்றோம் என தெரிவித்தார்.

 
 இதே வேளை ஜெயபுரம் வடக்கு கமக்கார அமைப்பில் தலைவர் எஸ். இராமன் கருத்து தெரிவிக்கையில்,, 1983ம்ஆண்டு யூலைக்கலவரங்களின் விளைவாக மலையகப் பகுதியிலிருந்து 548குடும்பங்கள் அகதிகளாக வெளியேறி, இடம்பெயர்ந்து இக்கிராமத்திற்கு வந்து குடியேறி வசித்து வருகின்றோம். இங்கு வந்தபோது எங்களுக்கு 1½ ஏக்கர் மேட்டுக்காணியும் அதேபோல 1ஏக்கர் வயல்காணியும் தருவதாக அரச அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது. இருப்பினும் அதற்கான ஆவணங்கள் பின்னர் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. நாம் இக்கிராமத்தில் எமது குடும்பங்களுக்கென ஒதுக்கப்பட்டுத்தந்த மேட்டுக்காணிகளில் குடியேறினோம். உள்நாட்டு யுத்தம் காரணமாக நாம் பல இடப்பெயர்வுகளைச் சந்தித்தோம்.


 2009ம்ஆண்டு யுத்தத்தின்போது முற்றுமுழுதாக இடம்பெயர்ந்து, முள்ளிவாய்க்கால் கிராமத்தினூடாக அரசாங்;கப்பகுதிக்கு வந்தோம் பிற்பாடு நலன்புரிமுகாம்களில் தங்க வைக்கப்பட்டு, 2009கார்த்திகை மாதம் அரசாங்கத்தால் எமது சொந்தகிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டோம். எமது கிராமத்திற்கு மீளவர பல ஆண்டுகள் சென்றதால் எமது மேட்டுக்காணிகள் சிறுகாடுகளாகியிருந்தன.


 எனவே அவற்றைத் துப்பரவு செய்தோம். இந்நிலையில் தற்போது 510குடும்பங்கள் எமது கிராமத்தில் வசித்து வருகின்றோம். இக்கிராமங்களில் வசித்துவந்த புதிதாகத்திருமணமான 21 குடும்பங்கள் தமது தந்தை தாய்மாரினால் பல வருடங்களாகப் பராமரிக்கப்பட்டு வந்த மேட்டுக்காணிகளில் தாங்கள் குடியிருப்பதற்காக தலா ½ ஏக்கர்வீதம் அக்காணிகளைத் துப்பரவு செய்து அங்கு குடியேறுவதற்காக, தேவையற்ற மரங்களை வெட்டினார்கள்.


 இதையறிந்த வனவளத்திணைக்களம் அக்காணிகள் அனைத்தும் தங்களுக்குரியது எனக்கூறி எல்லைக்கல் போட்டுள்ளனர். அத்தோடு கிளிநொச்சி மாவட்டநீதிமன்றத்திலும் 18பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்துமுள்ளனர். உண்மையில் இக்காணிகளில் குடியிருப்பது தொடர்பில் nஐயபுரம் கிராமசேகரால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதங்கள் எமக்குத்தரப்பட்டுள்ளன. ஒரு சிலருக்கு மின்இணைப்பு மற்றும் வீட்டுத்திட்டங்கள் கூட இக்காணிகளில் வழங்கப்பட்டும் உள்ளன.


 இக்காணிப்பிரச்சனைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொறுப்பான அமைச்சர் மற்றும் மேதகு ஐனாதிபதி ஆகியோர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு எமது காணிகளில் நாங்கள் குடியேறி குடும்பத்துடன் வாழ்வதற்கும் உரிய ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளுவதற்கும் ஆவன செய்துதருமாறு மிகவும் தாழ்மையுடன் எமது கோரிக்கையை முன்வைக்கின்றோம்.என தெரிவித்தனர். மடு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவி ஜெபா கருத்து தெரிவிக்கையில்நாங்கள் இக்கிராமத்தின் பூர்வீகக்குடிகளாவோம். புல நூறாண்டு காலமாக பரம்பரை பரம்பரையாக இக்கிராமத்தில் வசித்து வருகின்றோம்.


 எமதுமக்கள் ஆரம்பத்தில் சேனைப்பயிர்ச்செய்கை, வேட்டையாடுதல் மற்றும் தேன் எடுத்தல் என்பவற்றைச் செய்து வந்ததோடு, மழையை நம்பிய விவசாயம் செய்பவர்களாகவும் இருந்தார்கள்1990ம் ஆண்டு உள்நாட்டு யுத்தவன்செயல் காரணமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்ததோடு, பலகுடும்பங்கள் இந்தியாவிற்கும் இடம்பெயர்ந்து சென்றன. 1994ம்ஆண்டு 50குடும்பங்கள் இக்கிராமத்திற்கு மீளவும் திரும்பிவந்து குடியேறி வசித்து வந்தோம். நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக மீளவும் இடப்பெயர்வு நடைபெற்றது.


 இறுதியாக 2000ம் ஆண்டு மீள்குடியேற்ற நடவடிக்கையின் பொருட்டு மீள எமது கிராமங்களுக்குத் திரும்பியபோது, நீண்ட காலம் காணிகள் பராமரிப்புச் செய்யப்படாமையால் காணிகள் யாவும் சிறுகாடுகளாக இருந்தன. இதனால் வனவளப்பிரிவினர் எங்களது கிராமத்தில் பெருமளவு காணிகளை தமது கட்டுப்பாட்டுப்பிரதேசம் எனக்கூறி எல்லைக்கற்கள் இட்டுள்ளதோடு, முட்கம்பி வேலிமைத்து நாங்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் மற்றும் தோட்டம் செய்துவந்த காணிகளை கபளீகரம் செய்துள்ளனர். எங்களுக்கு காலத்திற்குக்காலம் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட காணி ஆவணங்களான அனுமதிப்பத்திரங்கள் மற்றும் உறுதிகள் உள்ளன. இருப்பினும் வனவளப்பிரிவினரால் இக்காணிகளுக்குள் செல்லுவது தடை செய்யப்பட்டுள்ளது.


 நாங்கள் எங்களது அன்றாட ஜிவனோபாயத்திற்கு பெரும்பாலும் விவசாயம், தோட்டம் மற்றும் சேனைப்பயிர்ச்செய்கையை முதன்மையாகக் கொள்வதால் எங்களுக்கு நிலம் என்பது வாழ்வாதாரத்திற்கான ஆதாரமாக உள்ளது. ஆனால் ஏறத்தாழ 50மூமானகாணிகள் வனவளப்பிரிவினரால் அபகரிக்கப்பட்டுள்ளது. எங்களுக்குச் சட்டரீதியாக வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நாம் ஆட்சிசெய்து பராமரித்துவந்த காணிகளை மீள எம்மிடம் ஒப்படைக்க ஆவன செய்துதருமாறு பல்வேறுதரப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு விடயங்கள் முன்னெடுக்கப்பட்டாலும்;, எதுவித முடிவும் இதுவரை எமக்குக்கிடைக்கப்பெறவில்லை.


 எனவே எங்களது வாழ்வின் ஆதாரமாக விளங்கும் எமக்கு உரித்தான காணிகளை வனவளப்பிரிவினரிடமிருந்து விடுவிப்புச்செய்து, நாங்கள் விவசாயம் மற்றும் மேட்டுநிலப்பயிர்செய்கை செய்து எமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு செல்லுவதற்கு ஆவன செய்து தருமாறு உரிய அரச அதிகாரிகள்பொறுப்பான அமைச்சர் மற்றும் மேதகு ஐனாதிபதி ஆகியோருக்கு எமது கோரிக்கையை தயவுடன் முன்வைக்கின்றோம்.


 எங்களது காணிப்பிரச்சனைகள் தொடர்பில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு எமக்கு ஆதரவும் உதவியுமளித்த மன்னார் சமுக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்திற்கு (மெசிடோவிற்கு) எமது கிராம மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.என தெரிவித்தனர். குறித்த ஊடக சந்திப்பில் சட்டத்தரணி ஏ.அர்ஜீன் கலந்துகொண்டு கருத்துக்களை முன் வைத்தார்.