பனை மான்மியம் முன்னிட்டு தாலம் சஞ்சிகை வெளியீடு!

mullai 4
mullai 4

பனை மான்மியம் 2020 பனை எழுச்சி வாரத்தினை முன்னிட்டு தாலம் சஞ்சிகை வெளியீடு மற்றும் சிறந்த அங்கத்தவர்கள் கௌரவிப்பு நிகழ்வு என்பன கடந்த 15-12-2020  காலை 10.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், வடமாகான மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயலாளர் ரூபினி வரதலிங்கம், வடமாகான கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருமான பொ.வாகீசன்,  கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் செ.தேவகுமாரி, மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் வி.சிவகுமார் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் கணக்காளர் ம.சுதர்சினி, நிர்வாக உத்தியோகத்தர் இ.அனுசியா ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

வடமகான கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சமாசங்கள் இணைந்து பனை எங்கள் சூழல் : பனை எங்கள் பண்பாடு : பனை எங்கள் பொருளாதாரம் எனும் தொனிப்பொருளில்  பெரும் எழுச்சியாக கொண்டாடும் இவ் விழா இம்முறை நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அந்தந்த மாவட்டங்களில் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் கொண்டாடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சமாசத்தின் அனுசரனையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தாலம் சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளதுடன் சிறந்த அங்கத்தவர்கள் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டுள்ளனர் மேலும் ஏற்பாட்டாளர்களால் கலந்து கொண்ட அதிதிகளுக்கு  நினைவுப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

mullai 19
mullai 18
mullai 17
mullai 16
mullai 15
mullai 14