குற்ற செயல்களுடன் தொடர்புடைய 61,300 பேர் இதுவரையில் கைது!

kaithu

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள்களுடன் 61,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1605 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் 13,896 கிலோகிராம் கஞ்சாவும், 802 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.