வெளியிடப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்களை பராமரிப்பதற்கான புதிய வழிகாட்டல்கள்!

அமைச்சு 1
அமைச்சு 1

பொருளாதார மத்திய நிலையங்களை பராமரிப்பதற்கான புதிய வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

அவை பின்வருமாறு,

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களுக்கும் குறிப்பிட்ட திட்டமொன்றை உருவாக்குதல், அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்கு அதற்கான ஒரு அதிகாரியை நியமித்தல், அத்துடன் பொருளாதார மத்திய நிலைய வளாகங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருத்தல்.

பொருளாதார மத்திய நிலைய வளாகத்துக்குள் வெற்றிலை சாப்பிடுதல், புகைத்தல், துப்புதல் போன்ற செயற்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை பொதுமக்களுக்கு அறிவுறுத்தல். மேலும் தனிநபர் இடைவெளியைப் பேண நடவடிக்கை எடுத்தல் மற்றும் அங்குள்ள குப்பைகளை உரிய முறையில் அகற்றுதல்.

பொருளாதார மத்திய நிலைய வளாகத்திற்குள் வருகின்றவர்களை எழுமானமாக பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தல் மற்றும் இங்கு வருகின்றவர்களின் கைகளை கழுவக் கூடிய வீசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்குடனேயே இந்த வழிகாட்டல்களை அறிமுகப்படுத்தியிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.