ஜனாஸா எரிப்புக்கு எதிராக சம்மாந்துறையில் கவனயீர்ப்பு போராட்டம்!

WhatsApp Image 2020 12 25 at 1.41.55 PM 1
WhatsApp Image 2020 12 25 at 1.41.55 PM 1

கொரோனாதொற்றுக்குள்ளாகி உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எரிப்பதை கண்டித்து ஶ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் சம்மாந்துறைக் கிளை ஏற்பாடு செய்த அமைதியான எதிர்ப்பு பேரணி சம்மாந்துறை நகரில் இன்று(25) இடம்பெற்றது.

ஶ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத் சம்மாந்துறைக் கிளையின் தலைவர் எம்.ஜப்பார் தலைமையில் நடைபெற்ற எதிர்ப்பு பேரணியில் இக்கிளையின் அங்கத்தவர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

“இலங்கை அரசே” கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் உரிமையை உறுதிப்படுத்து”, “உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கிய அறிவுறுத்தல்களை அமுல்படுத்து”, முஸ்லிம் மக்களின் உரிமையை கொடு எரிப்பதனை நிறுத்து”,  ஜனாஸாக்களை பலவந்தமாக எரிக்காதே”, நீதி இல்லை எரிப்பதை கேட்க நாதியில்லை”, ஏமாற்றாதே! ஏமாற்றாதே! புதைக்க வழி இல்லை என்று ஏமாற்றாதே! போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் அமைதியான முறையில் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

WhatsApp Image 2020 12 25 at 1.41.56 PM
WhatsApp Image 2020 12 25 at 1.41.56 PM 1
WhatsApp Image 2020 12 25 at 1.41.55 PM
WhatsApp Image 2020 12 25 at 1.41.55 PM 2
WhatsApp Image 2020 12 25 at 1.41.55 PM 1
WhatsApp Image 2020 12 25 at 1.41.55 PM 1 1