தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக மேலும் 35 பேர் கைது!

தனிமைப்படுத்தலுக்கான சுற்றிவைப்பு தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகண தெரிவித்துள்ளார்.

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 35 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 1829 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாககாவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1700 நபர் கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படும்.

விசேடமா இன்று சனிக்கிழமை நத்தார் தினத்தின் அடுத்த நாள் என்பதால் பொதுமக்கள் நடமாட்டத்தைக் குறைத்து முடிந்தவரை வீட்டில் தங்கியிருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்றுங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்ல வேண்டியிருந்தால் அந்த சந்தர்ப்பத்தில் முகக் கவசம் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், வீதிகள் மற்றும் தொடர் மாடி பகுதிகளில் வசிக்கும்  எந்த நபர்களும்  வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.